February 14, 2017

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு!

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வரலாறு, குறிப்பு என்பதை பார்போம்.

தல வரலாறு:

திருச்செங்கோட்டு மலை (அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு): திருச்செங்கோடு என்பதற்கு ‘அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்றும், செங்குத்தான மலை” என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது.

தத்தலம் 1901 அடி உயரம் மற்றும் 1200 படிகள் உள்ளன. படி ஏற முடியாதவர்கள் கோயில் வரை வாகனத்திலும் செல்லலாம்.

இந்த மலை உருவானதற்கு ஒரு புராணக்கதை உண்டு. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது.

ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம்.

இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை.

ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர். இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்னும் பெயர்களும் உண்டு.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு

திருத்தலக் குறிப்பு:

தல இறைவன் : அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர், அருள்மிகு செங்கோட்டு வேலவர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள்.

தல இறைவி: பாகம்பிரியாள்

தல விருட்சம்: இலுப்பை மரம்.

தல தீர்த்தம் : தேவ தீர்த்தம், கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாவநாச தீர்த்தம், தீன்ம தீர்த்தம், வைரவ தீர்த்தம், வாண தீர்த்தம், சண்முக தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், சப்தகன்னியர் தீர்த்தம், நாக தீர்த்தம்.

திருவிழாக்கள்: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.

 

சிறப்பம்சங்கள் :

ஒரே உருவத்தில் இடது பக்கம் பெண்ணுருவாகவும், வலது பக்கம் ஆணின் உருவமாகவும் உமையொரு பாகனாய், ஈருடல் ஓருயிர் என்னும் சொல்லிற்கு உண்மையிலேயே சரியானதொரு வடிவத்தை இங்கு காணமுடியும்.

வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடன் அமையப் பெற்ற திருத்தலம். சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி உள்ளது உலகிலேயே இத்தலத்தில் மட்டும்தான்.

இதுவே இத்திருக்கோவிலின் பெருஞ்சிறப்பு. தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் என பல்வேறு தெய்வீக நு}ல்களில் இத்திருக்கோவில் போற்றி பாடப்பட்டுள்ளது.

இத்திருக்கோவில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோவில் அமைப்புடன், ஒரே திருக்கோவிலாய் அமையப் பெற்ற திருத்தலம். ஒற்றுமையின் சின்னமாய் திகழ்கிறது இத்திருத்தல அமைப்பு.

சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருச்செங்கோடு மற்றுமின்றி வாசுதேவநல்லூரிலும் (திருநெல்வேலி)  உள்ளது.

கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு சிவா தலங்களில் மிக முக்கியமானதாக இக்கோவில் உள்ளது

 

நாக சிலை :

60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோவில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடுசெய்கின்றனர்.

 

ஒற்றுமை விரதம் :

திருவண்ணாமலை போலவே இம்மலையை பௌர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோவிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள்கள் கடைபிடிக்கப்படுகிறது.

உங்களுடைய வேண்டுகோள் அனைத்தையும் நிறைவேற்றும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரை வணங்கி எல்லா வளங்களையும் பெற்று மகிழுங்கள்….!

முக்கிய விபரங்கள்:

Official Website Click here to open link in new tab
Route Map Click here to link open in new tab
Pooja Timings
Kala Santi Pooja 8:00am IST
Uchi Kaala Pooja 12:00pm IST
Sayarachai Pooja 5:00pm IST
Fees Details
Special Tharisanam Rs. 10.00
Archanai Rs. 5.00
Ear Boring Rs. 10.00
Offering  Hair Rs. 10.00
Nei Deepam Rs. 3.00
Abisegam Rs. 10.00
Special Way Entrance fees Rs. 25.00
Two Wheeler Rs. 10.00
Four Wheeler Rs. 20.00
Temple History Rs. 15.00

 

 

கொங்கு நாட்டில் உள்ள 7 சிவஸ்தலங்கள்

சங்கமேஸ்வரர் திருநணா (பவானி)
அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு
பசுபதிநாதர் கருவூர் (கரூர்)
திருமுருகநாதசுவாமி திருமுருகப்பூண்டி
கொடுமுடிநாதர் கொடுமுடி
அவிநாசியப்பர் திருப்புக்கொளியூர் (அவிநாசி)
விகிர்தநாதேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்

Sharing is caring!

About the author 

myilraj

Hey, I am Myilraj G, from Tamil-Nadu India. The decision I made on 31-DEC-2015, has entirely changed my life from a novice office going guy into a successful entrepreneur. Blogging was my passion and life becomes enjoyable. Get here to know more about me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
shares